Wednesday, February 7, 2007

89. உட்பகை

நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின். -881

வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக

கேள்போல் பகைவர் தொடர்பு. -882

உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து

மட்பகையின் மாணத் தெறும். -883

மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா

ஏதம் பலவும் தரும். -884

உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்
முறையான்
ஏதம் பலவும் தரும். -885

ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்

பொன்றாமை ஒன்றல் அரிது. -886

செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே

உட்பகை உற்ற குடி. -887

அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது

உட்பகை உற்ற குடி. -888

எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்

உட்பகை உள்ளதாங் கேடு. -889

உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்

பாம்போடு உடனுறைந் தற்று. -890

இந்த குறட்பாக்களுக்கு ஏதாகிலும் வித்தியாசமான பொருள் உங்களுக்குத் தோன்றினால், ஆங்கிலத்திலோ, தமிழிலோ பின்னூட்டமிட வரவேற்கிறோம்.

4 comments:

Anonymous said...

சின்னப்பையனா இருந்தப்போ, கிராமத்துல பெரியம்மா "உலை வச்சுட்டு வந்தர்றேன்" னு சொல்லிட்டு சமையல் அறைக்குப் போயி, அரிசியை அடுப்பில சமைக்க வைக்கறத பாத்திருக்கேன். இதை நினைவில வச்சுகிட்டு குறள் #883 ஐ பார்த்தோம்னா, அடுப்பில வைக்கப்பட்ட மண்பானைதான் என் மனசுக்குத் தெரியுது. இங்கே, இந்த அடுப்பு, மண்பானை இதெலலாம் சமையலறையில இருக்குதா அல்லது பட்டறையில இருக்குதா அப்படீங்கறது இரண்டாம் பட்சம்.
அடுப்பும் மண்பானையும் எங்க வேணும்னாலும் இருந்துட்டுப் போகட்டும். மண்பானையில அரிசியோ, உலோகமோ அல்லது இரசாயனக்கலவையோ இருந்துட்டுப் போகட்டும். நாம்பார்க்கறதெல்லாம், மண்பானையில, விரிசல் விழுந்தததுன்னா, அது பானையை மட்டுமில்லாம அடுப்பையும் பாதிச்சுரும்ங்கறதுதான். இதப்போல, உட்பகை இருந்ததுன்னா மொத்தமா பாதிச்சுரும், அதனால உட்பகையப் பாத்து அஞ்சி பாதுகாத்துக்கனும்கறதுதான் கருத்துன்னு நினைக்கிறேன்.

சில உரையாசிரியர்கள், பச்சை மண்பானை, குயவனோட கத்திபட்டா சிதைஞ்சுடும்னு சொல்லறது எம்மனசுக்கு அவ்வளவு பொருத்தமா படல. ஏன்னா குயவன், கத்தி எல்லாம் இந்தக் குறள்ல இருக்கறமாதிரி தெரியல.

நீங்க என்ன நினைக்கறீங்க?

-முநி

முநி said...

890வது குறளை எடுத்துகிட்டா, டயாஸ், பரிமேலழகர் ஆகிய உரையாசிரியர்கள் உட்பகையோடு வாழ்வது என்பது ஒரே குடிசைக்குள் பாம்போடு வாழ்வது என்பது போல பொருள் கொள்றாங்க.

அடிப்படையில, உட்பகையோட வாழறதுங்கறது, பாம்போட வாழறது மாதிரிங்கறதுல யாருக்கும் சந்தேகம் இல்லைன்னே நினைக்கிறேன். இங்கே, குடிசையா, குடமா அல்லது வேற ஏதாவதாங்கறதுதான் எம்மனசுல இருக்கற கேள்வி.

பார்த்தீங்கன்னா, "குட" என்ற சொல்லுக்கு 'வளைந்த', 'கோணலான' அப்படீன்னு பொருள் இருக்கு. வளைகுடா, குடை, குடல், குடங்கம் போன்ற சொற்களெல்லாம் இதிலிருந்து வந்ததா இருக்குமோ?

அப்புறம், "கருள்" என்ற சொல்லுக்கு பால்ஸ் அகராதி கீழேயிருக்கற மாதிரி பொருள் சொல்லுது.

"கருள்" = கறுப்பு, குற்றம், கரை, சீற்றம்

இதையெல்லாம் வச்சுகிட்டு பார்த்தா,

'குடங்கருள் பாம்போடு உடனுறைந் தற்ற' என்பதற்கு

'வளைந்த, சீறுகின்ற பாம்போட வாழ்வது போல' அப்படீன்னு பொருள்கொள்ள வாய்ப்பு இருக்குது.

நீங்க என்ன நினைக்கிறீங்க?

Anonymous said...

Cologne Online Tamil Lexicon: Search Results

1 கருள் 1. darkness; 2. black, blackness; 3. blot, stain; 4. indignation, wrath; 5. excellent clothing


1 குட curved, bent
2 குடா 1. bend, curve; 2. cavity, hollow, cavern; 3. remote part of a large country or field nook corner recess

41 உலைவு 1. tremor, trembling; 2. tribulation, uneasiness; 3. ruin, destruction; 4. rout, defeat; 5. agitation, trouble, vexation; 6. poverty, indigence; 7. langour, weariness

1 உலை 03 1. smith's forge or furnace; 2. fireplace for cooking, oven; 3. pot of water set over the fire for boiling rice; 4. flurry, excitement, agitation

-முநி

Anonymous said...

Generally it is considered that the thoughts on this chapter will be more fitting govt official, administrator, CEO or a leader of a profit / non profit organization. However my view point this can be applied to a close knit family, close circle of friends or members of any close working team. The idea is that one has to be very vigil about the communication and ensure that he or she is understood correctly. This can be about a thought, idea, plan or action. If one is very watchful he or she can identify any discordance among the members and work to clarify it. If this kind of small real or perceived bad feeling is not addressed quickly it can result in "uTpakai". A quote from Abraham Linoln's speech is relevant to this topic - " A house divided against itself cannot stand"

-Arasu